வவுனியாவில் பணியாற்றும் பிரபல சிங்கள  பத்திரிக்கை ஒன்றின் செய்தியாளாரின் ஒன்றரை வயதுடைய குழந்தைக்கு இந்தியாவில் இடம்பெற இருக்கும் ஈரல் மாற்று சத்திர சிகிச்சிக்காக  இன்று (17/12/2017) வடக்கு மாகான சபை உறுப்பினர் செந்தில் நாதன் மயூரன் அவர்கள் தனது சொந்த நிதியில் இருந்து ஒருதொகை பணத்தினை வழங்கியுள்ளார் .

குறித்த குழந்தையின் சத்திர சிகிச்சைக்கு 7500000 ரூபா தேவைப்படும் என மதிப்பிடப்பட்டுள்ளமையினால் பலரும் உதவிவரும்   நிலையில் வவுனியா ஊடகவியலாளர்களின்  வேண்டுகோளுக்கு இணங்கவே வடமாகாண சபை உறுப்பினர் செ.மயூரன் அவர்கள் தனது சொந்த நிதியில் இருந்து குறிப்பிட்ட தொகையினை வழங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது .

mayooran mayooran-01

செய்தியை நண்பர்களுடன் பகிருங்கள்