தமிழகத்தில் தற்போது இருக்கும் பாஜகவின் நிர்வாக அமைப்பை வைத்துக்கொண்டு மாற்று அரசியலை கொண்டுவர முடியாது என பாஜக எம்பி சுப்பிரமணிய சுவாமி கூறியுள்ளார்.18-1439903779-rajini-actor-new-600

ஆங்கில தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டியளித்துள்ள இவர், தமிழகத்தைப் பொறுத்தவரையில் வாக்காளர்கள் சுயமாக வாக்களிக்கக் கூடியவர்கள்.

இளைய தலைமுறை வாக்காளர்கள் தேசிய சிந்தனையுடன் இருக்கிறார்கள். மேலும், அரசியலுக்கு ரஜினிகாந்த் எந்த விதத்திலும் தகுதியானவர் இல்லை.

மேலும், தமிழக அரசியல் குறித்து தெரியாத அவர், எதிலும் நிலையானவர் அல்ல. மேலும் ரஜினிகாந்த் மூலம் சசிகலாவுக்கு எந்த ஒரு அரசியல் சவாலும் வரப்போவதில்லை என்று கூறியுள்ளார்.

எனவே, தற்போது இருக்கும் தமிழக பாஜகவை கலைத்துவிட்டு, பொறுப்பை என்னிடம் கொடுத்தால் மாற்று அரசியல் உண்டாகும் என கூறியுள்ளார்.

செய்தியை நண்பர்களுடன் பகிருங்கள்