சாதி மறுப்புத் திருமணம் செய்து வைத்தார் என்பதற்காக பெண் ஒருவரை படுகொலை செய்த சந்தேக நபர்கள் இருவருக்கு நெல்லை மாவட்ட நீதிமன்றம் தூக்குத் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

இவ்விவகாரம் தொடர்பாக தெரியவருவதாவது,

நெல்லை வண்ணாரப்பேட்டைச் சேர்ந்த விஸ்வநாதன், காவேரி ஆகியோர் கடந்த ஆண்டு சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்டனர்.

இவர்களின் திருமணத்திற்கு விஸ்வநாதனின் சகோதரி கல்பனா உதவியதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் கடும் கோபமடைந்த காவேரியின் பெற்றோர் கல்பனாவை கடந்த ஆண்டு மே மாதம் 13-ம் திகதி வெட்டிப் படுகொலை செய்தனர்.

இந்நிலையில் குறித்த வழக்கு நெல்லை மாவட்ட நீதிமன்றத்தில் விசாரணை நடத்தப்பட்டுவந்தது.

இதேவேளை இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, கல்பனாவை படுகொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டிருந்த, காவேரியின் பெற்றோர் சங்கரநாராயணன், செல்லம்மாள் ஆகியோருக்கு மரண தண்டனை விதித்து அதிரடி தீர்ப்பு வழங்கினார்.

செய்தியை நண்பர்களுடன் பகிருங்கள்