தஸ்னீம் ஹலபி என்ற 15 வயது பாலஸ்தீன் சிறுமிக்கு இஸ்ரேல் நீதிமன்றம் ஒன்றரை வருடம் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியதாக பாலஸ்தீன் செய்திகள் தெரிவிக்கின்றன.screenshot_2017-01-10-23-32-57-1

மேற்குக் கரையில் உள்ள ரமல்லா பிரதேசத்தைச் சேர்ந்த மேற்படி சிறுமி அவரது நண்பி நதாலி ஷூகாஹ் (14 வயது) என்ற சிறுமியுடன் கடந்த ஏப்ரல் மாதம் 29 ம் திகதி இஸ்ரேல் பொலிஸாரால் கத்தியால் குத்த முயற்சித்தார் எனும் குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பாட்டார்.

ஆக்கிரமிப்பு படைகளின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான அவரது நண்பி நதாலி ஷூகாஹ்வுக்கும் கடந்த மாதம் இதே போன்ற தீர்ப்பு வழங்கப்பட்டது.

கடந்த 2015 முதல் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட பாலஸ்தீன் குழந்தைகளை ஆக்கிரமிப்பு படைகள் சிறை பிடித்திருந்த நிலையில், தற்போது, இஸ்ரேல் சிறைகளில் 350 க்கும் மேற்பட்ட சிறுவர், சிறுமியர்கள் சிறை வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

செய்தியை நண்பர்களுடன் பகிருங்கள்