வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கையர்களை ஓய்வூதியத் திட்டத்தில் இணைந்து கொள்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.screenshot_2017-01-11-15-45-15-1

வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் தலதா அத்துகோரல இதனை தெரிவித்துள்ளார்.

பதிவு செய்துகொள்ளாத தொழிலாளர்கள் இந்த ஓய்வூதிய அனுகூலங்களை இழக்க நேரிடும்.

அதற்கமைய அவர்கள் பிரதேச செயலகங்களில் பதிவுகளை மேற்கொள்ள முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

வரலாற்றில் முதற்தடவையாக, புலம்பெயர் இலங்கைத் தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தொழிலாளர்களின் சமூகப் பாதுகாப்பை உறுதி செய்து நலன்களைப் பெற்றுக்கொடுப்பது அரசாங்கத்தின் நோக்கம் என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

செய்தியை நண்பர்களுடன் பகிருங்கள்