ஜெயலலிதா மறைவிக்கு பின் தமிழக அரசியலலில் பிரபலமடைந்து வருபவர் தீபா.09-1483957614-deepa03-600

தற்போது, அவரால் சசிகலாவுக்கு மட்டுமின்றி திமுகவுக்கும் நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஜெயலலிதாவின் மறைவுக்கு பின்னர், அனைவருமே அவரின் அண்ணன் மகள் தீபாவின் முடிவு குறித்து எதிர்பார்த்து கொண்டிருக்கின்றனர்.

சசிகலா தலைமையை விரும்பாத அதிமுகவினர் தீபாவின் இல்லத்திற்கு முன்கூடியே அவரை தீவிர அரசியலில் ஈடுபட வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகின்றனர். தீபாவும் விரைவில் தன் முடிவை அறிவிப்பதாக தெரிவித்து வருகிறார்.

இந்நிலையில், திமுகவில் செயல் தலைவர் பதவியை ஏற்றுக் கொண்டுள்ள மு.க.ஸ்டாலினுக்கு எதிராக சிலர் கிளம்பியுள்ளதாக கூறப்படுகிறது.

ஸ்டாலினை பிடிக்காத தொண்டர்கள், சிலர் அக்கட்சியில் இருந்து வெளியேற முடிவெடுத்துள்ளனர். அவர்களும் தி.மு.க.,வைச் சேர்ந்த முக்கியஸ்தர்கள் பலரும், தீபாவை ஆதரிக்க முடிவு எடுத்துள்ளதாக தெரிகிறது. இதைத் தடுக்க, தி.மு.க.,வும் முயற்சிப்பதாகவும் சொல்லப்படுகிறது.

செய்தியை நண்பர்களுடன் பகிருங்கள்