lemon-for-face-beauty

வேலைக்கு செல்லும் பெண்களுக்கு, தினமும் அலுவலகம் செல்லும் டென்ஷனில் சருமத்தை பாதுகாப்பது சற்று கடினமான காரியமாகவே உள்ளது.

எப்போதும் ப்ரஷ்ஷாக இருக்க உங்களுக்காகவே பிரத்யேக குளியல் பவுடர் இங்கு கொடுக்கப்பட்டுள்ளது.

எலுமிச்சை பேஸ் பேக்

தேவையான பொருட்கள்

  • எலுமிச்சை தோல்-50 கிராம்,
  • கஸ்தூரி மஞ்சள்-100 கிராம்,
  • கசகசா- 50 கிராம்,
  • பயத்தம் பருப்பு- கால் கிலோ…
  • கடலை மாவு- 6 டீஸ்பூன்,
  • முல்தானி மட்டி- அரை டீஸ்பூன்,
  • எலுமிச்சைச் சாறு- 4 டீஸ்பூன்
செய்முறை
  • முதலில் எலுமிச்சை தோல், கஸ்தூரி மஞ்சள் மற்றும் கசகசாவை மெஷினில் நன்கு அரைத்துக் கொள்ளுங்கள்.
  • பிறகு கடலை மாவு, முல்தானி மட்டி மற்றும் எலுமிச்சை சாற்றை இதனுடன் கலந்து கொள்ளுங்கள்.
  • இந்த பவுடரை முகம் முதல் பாதம் வரை பூசி பத்து நிமிடங்கள் கழித்து குளியுங்கள்.
  • ஒரு நாள் விட்டு ஒரு நாள் இந்த `பேக்’கை உடலில் தேய்த்து குளிப்பதன் மூலம் சருமம் சுத்தமாக்குவதுடன், இழந்த பொலிவும் விரைவிலேயே திரும்ப கிடைக்கும்.

 

செய்தியை நண்பர்களுடன் பகிருங்கள்