இளவாலை என்னும் கிராமத்திலிருந்து இன்று இலங்கையில் அனைவரையும் தன்பக்கம் பார்க்க வைத்த மகாஜன மங்கை அனித்தா.

சிறு வயதிலிருந்து அவரின் விடாமுயற்சியும் அயராத பயிற்சியும் பயிற்சியாளரின் நுணுக்கங்களுமே இச்சாதனையை ஏற்படுத்தக்காரணமாகும்.

தற்பொழுது அனித்தா பல்கலைக்கழகம் புகவுள்ள காரணத்தினாலும் மற்றும் மேலும் விளையாட்டுத்துறையில் சாதனைப்படைப்பதற்காகவும் மகாஜனன்கள் உதவவேண்டும்.

ஏற்கனவே உதவிசெய்து வருகின்ற வேளையிலும் மென்மேலும் உதவிடுவீர்கள் என நம்புகின்றேன்.

கிராமப்புறத்திலிருந்து பொருளாதாரத்தில் பின்தங்கிய நிலையிலும் கூட அயராது முயற்சி செய்து இச்சாதனையை நிகழ்த்தியுள்ளார்.

அவரிடம் ஒழுங்கான துவிச்சக்கரவண்டி கூட இல்லை எனவே அவருக்குரிய தேவைகளை கேட்டறிந்து அவருக்கு உதவ முன்வருமாறு இளவாலை மக்களாகிய நாங்கள் கேட்டுக்கொள்கின்றோம் என தெரிவித்துள்ளனர்.

சாதனை நாயகியை ஊக்குவித்து இலங்கை சார்பாக பங்குபெற செய்ய முன்வாருங்கள் என itntamil.com சார்பாகவும் கேட்டுக்கொள்கின்றோம்.

fb_img_1475320023488 fb_img_1475320025708 fb_img_1475320028034

செய்தியை நண்பர்களுடன் பகிருங்கள்