எலக்ட்ரிக் கார் வடிவமைப்பில் மிகவும் பிரபல்யமான நிறுவனமாக டெஸ்லா இருந்து வருகின்றது.
இதுவரை மூன்று இலட்சத்திற்கும் மேற்பட்ட கார்களை இந்நிறுவனம் வடிவமைத்து விற்பனை செய்துள்ளது.
தானியங்கி தொழில்நுட்பத்தின் ஆரம்ப கட்டத்தில் இருக்கும் இக் கார்களுக்கு விசேட மென்பொருட்களும் காணப்படுகின்றன.
தற்போது இம் மென்பொருட்களுக்கான புதிய அப்டேட் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இதில் காரின் ஹோர்ன் ஒலியினை விரும்பிய வகையில் மாற்றியமைக்கக்கூடிய வசதிகள் தரப்பட்டுள்ளது.
அத்துடன் மேலும் பல புதிய வசதிகள் இதில் உள்ளடக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தவிர சில வசதிகளை மிக விரைவாகப் பயன்படுத்தக்கூடிய வகையிலான மாற்றங்களும் உள்ளடக்கப்பட்டுள்ளன.