இந்தியாவின் முன்னணி தொழிலதிபர் முகேஷ் அம்பானி மற்றும் அவரது மனைவி நீடா அம்பானி ஆகியோரின் மகன் ஆனந்த் அம்பானிக்கும், என்கோர் ஹெல்த்கேர் CEO விரேன் மெர்ச்சன்ட் மற்றும் மனைவி ஷைலா மெர்ச்சன்ட் ஆகியோரின் மகள் ராதிகா மெர்ச்சன்ட் ஆகிய இருவருக்கும் விரைவில் திருமணம் நடைபெற உள்ளது.
ஆனந்த அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சன்ட் ஆகிய இருவரும் சில வருடங்களாக நண்பர்களாக இருந்து வந்த நிலையில், தற்போது இவர்கள் இருவருக்கும் திருமண நிச்சயதார்த்த விழா நடைபெற்றுள்ளது.