பிரித்தானியாவைச் சேர்ந்த பிரபல பாடகியும், பாடலாசிரியருமான Brocarde, நீண்ட நாட்களுக்கு முன்பு மரணமடைந்த Edwardo என்னும் போர் வீரர் ஒருவரின் ஆவியைத் திருமணம் செய்துகொண்டார்.
லண்டனில் நடைபெற்ற தனது திருமணத்துக்கு, பிரபல நடிகை மர்லின் மன்றோ, எல்விஸ் மற்றும் எட்டாம் ஹென்றி ஆகியோர் வந்து வாழ்த்துக்கள் தெரிவித்ததாக அவர் தெரிவித்திருந்தார்.
ஆனால், தங்கள் திருமண வாழ்வில் தற்போது பிரச்சினை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கிறார் Brocarde. அவரது கணவரான Edwardo ஒரு ஆவியாக இருப்பதால், நினைத்த நேரமெல்லாம் வந்துவந்து போகிறாராம். அதாவது நிரந்தரமாக வீட்டில் தங்கமாட்டேன் என்கிறாராம்.
அவர் இனி சுதந்திரமாக அலையும் ஆவி எல்ல, அவர் என் கணவர் என்பதை புரிந்துகொள்ளகிறார் இல்லை என்கிறார்.
இப்படி அவருடைய நாடகங்களையெல்லாம் இனி என்னால் பொருத்துக்கொள்ளமுடியாது எங்கள் திருமண வாழ்வு நீடிக்கவேண்டுமானால் ஆவிகளுடன் பேசும் திருமண ஆலோசகர் ஒருவரின் உதவி எங்களுக்குத் தேவை என்று கூறியுள்ளார்.