வவுனியாவில் இரண்டு மாதத்திற்கு மேல் மின்சாரக் கட்டணம் செலுத்தாவிட்டால் ஒரு மணித்தியாலம் கால அவகாசம் வழங்கப்பட்டு மின்சாரத்துண்டிப்பு மேற்கொள்ள மின்சார சபை உத்தியோகத்தர்கள் (19.01.2023) நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளனர்.
குருமன்காடு, வைரவபுளியங்குளம் ஆகிய பகுதிகளிலுள்ள வர்த்தக நிலையங்கள் மற்றும் மின்சார நிலுவைகள் காணப்படும் வீடுகளுக்கு சென்ற மின்சார சபை உத்தியோகத்தர்கள் இரண்டு மாதத்திற்கு மேல் தொடர்ந்து மின்சாரப்பட்டியல் நிலுவை செலுத்தாதவீடுகளுக்கு மின்சாரத்துண்டிப்பு மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் அறிவுறுத்தல்களை வழங்கி வருகின்றனர்.