ஆண்களுக்கு ஆண்களும், பெண்களுக்கு பெண்களும் மட்டுமே மசாஜ் செய்ய முடியும் எனும் வகையில் கடுமையான சட்டம் கொண்டுவரப்படவுள்ளது.அதற்காக பல வழிமுறைகளில் சட்டம் இயற்றப்படும் என ஆயுர்வேத ஆணையாளர் நாயகம் தம்மிக்க அபேகுணவர்தன தெரிவித்துள்ளார்.
மசாஜ் நிலையங்களின் மூலம் எய்ட்ஸ் போன்ற மற்றும் பாலியல் ரீதியான நோய்கள் அதிகம் பரவி வருவதால் இந்த சட்டம் உருவாக்கப்படுவதக ஆணையாளர் கூறுகின்றார்.
ஆயுர்வேத திணைக்களத்தில் மசாஜ் நிலையங்கள் பதிவு செய்யப்பட வேண்டும் எனவும் மற்றும் அனுபவம் உள்ள பயிற்சியாளர்கள் மட்டுமே இருக்க வேண்டும். மற்றும் மசாஜ் நடவடிக்கைகளில் ஈடுபடும் ஊழியர்கள் தொழில்பற்றிய அறிவு மற்றும் பயிற்சி பெற்றிருக்க வேண்டும் என ஆணையாளர் நாயகம் தெரிவித்தார்.