2020ம் ஆண்டின் முதலாவது சந்திர கிரகணம் போயா தினத்தில் அவதானிக்க முடிந்தது. இந்த வருடத்தின் முதலாவது சந்திரகிரகணம் இதுவாகும். இது வெள்ளிக்கிழமை இரவு 10.37 மணிக்கு தொடங்கிய சந்திரகிரகணம், சனிக்கிழமை அதிகாலை 2.42 மணிக்கு முடிவடைந்தது.
இச்சந்திர கிரகணத்தை ஓநாய் சந்திர கிரகணம் என்று நாசா நிறுவனம் பெயரிட்டுள்ளது. சந்திரனுக்கும், சூரியனுக்கும் இடையில் பூமி பயணிக்கும்போது நிலவின் ஒளி மறைக்கப்படும் நிலையே சந்திரகிரகணம் என்று அழைக்கப்படுகின்றது.
மேலும் இவ்வருடம் ஜூன் 05, ஜூலை 05 மற்றும் நவம்பர் 30ம் திகதிகளில் மேலும் மூன்று சந்திர கிரகணம் நிகழவுள்ளமை குறிப்பிடத்தக்கது.