இலங்கை அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படும் மனித கடத்தல் எதிர்ப்பு நடவடிக்கைகளுக்காக உலங்குவானூர்திகளை வழங்குவதன் மூலம் இலங்கைக்கு உதவ இத்தாலிய அரசாங்கம் முன்வந்துள்ளது.
இந்த விடயத்தை ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன், ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற சந்திப்பின் போது இத்தாலிய தூதுவர் ரீட்டா கியுலியானா மன்னெல்லா இதனை குறிப்பிட்டுள்ளார்.