ஒரே பிரசவத்தில் 6 குழந்தைகளை பெற்றெடுத்த தாய்!!

Related Articles

ஒரே பிரசவத்தில்..

மத்தியரே பிரதேச மாநிலத்தை சேர்ந்த கர்ப்பிணி பெண் ஒருவருக்கு ஒரே பிரசவத்தில் 6 குழந்தைகள் பிறந்துள்ளன.

மத்தியரே பிரதேச மாநிலத்தின் ஷியோபூர் மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கர்ப்பிணி ஒருவருக்கு, நேற்று காலை 10 மணியளவில் ஒரே பிரசவத்தில் 4 ஆண், 2 பெண் என ஆறு குழந்தைகள் பிறந்துள்ளன.

கர்ப்பத்தின் 28 வது வாரத்தில் அந்த பெண் குழந்தைகளை பெற்றெடுத்ததாக மருத்துவர் ஆர்.பி. கோயல் தெரிவித்துள்ளார்.

அவர்கள் எல்லாருமே எடை குறைந்தவர்களாக இருந்தனர். அதன் காரணமாக 2 பெண் குழந்தைகள் இறந்துவிட்டனர்.

மீதமுள்ள 4 புதிதாகப் பிறந்த குழந்தைகளும் எடை குறைந்தவர்கள் என்றும் தொடர்ந்து மருத்துவர்கள் கண்காணித்து வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

இயற்கையாகவே ஒரே பிரசவத்தில் 6 குழந்தைகள் பிறப்பது மிகவும் அரிது. இந்த பிரசவம் 35 நிமிடங்களுக்கு நீடித்தது. தற்போது அந்த பெண் நல்ல நிலையில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

More on this topic

Comments

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Advertismentspot_img

Popular News