உலகிலுள்ள மேம்படுத்தப்பட்ட விமான நிலையங்களைப் போன்று, கட்டுநாயக்க விமான நிலையத்திலும் இலத்திரனியல் நுழைவாயில் வசதிகளை ஏற்படுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகள் துரிதமாக மேற்கொள்ளப்படும் என அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.
அமைச்சின் கேட்போர் கூடத்தில் நடைபெற்ற கூட்டத்தில் விமான நிலைய மற்றும் விமான நிறுவன அதிகாரிகளுக்கு இந்த நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அமைச்சர் அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார்.
முதற்கட்டமாக, வருகை முனையத்தில் இரண்டு வாயில்களையும், புறப்படும் முனையத்தில் இரண்டு வாயில்களையும் நிறுவ அறிவுறுத்தப்பட்டுள்ளது
IOM என்ற அமைப்பு இந்த திட்டத்திற்கு தேவையான நிதி ஒதுக்கீட்டை வழங்கும் எனவும் அதற்கு ஒரு வருடம் ஆகும் என்பதும் இங்கு தெரியவந்ததுள்ளது