பாடசாலை மாணவர்களுக்கான சப்பாத்து, புத்தகப்பைகளின் விலைகளை குறைக்க தீர்மானம்

Related Articles

பாடசாலை மாணவர்களுக்கான புத்தகப்பைகள் மற்றும் சப்பாத்துகளின் விலைகளை விரைவாக குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

நிதி அமைச்சில் நேற்று(11) இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அமைச்சர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

டொலரின் பெறுமதி வீழ்ச்சியடைந்துள்ளமைக்கு அமைவாக, உள்நாட்டு சந்தையில் பாடசாலை புத்தகப்பைகள் மற்றும் சப்பாத்துகளின் விலைகள் குறைக்கப்பட ​வேண்டும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டி வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பில் ஆராய்ந்து ஒரு வாரத்திற்குள் அறிக்கை சமர்ப்பிக்குமாறு சந்தை மற்றும் முதலீட்டு கொள்கைகள் திணைக்களத்திற்கு அவர் பணிப்புரை விடுத்துள்ளார்.

புத்தகப்பைகள் மற்றும் சப்பாத்துகளின் விலைகள் குறைவடையாத பட்சத்தில் அது தொடர்பில் ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டுசென்று விலைகளை குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கை பாடசாலைகளில் புதிய கல்வி ஆண்டு ஆரம்பித்துள்ள நிலையில் புத்தகப்பைகள் மற்றும் சப்பாத்துகளை கொள்வனவு செய்வதற்கு பெற்றோர்கள் பாரிய சிரமங்களை எதிர்நோக்குவதால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய சுட்டிக்காட்டியுள்ளார்.

More on this topic

Comments

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Advertismentspot_img

Popular News