பூமியை ஒத்ததாக அமைந்திருக்கும் புதிய கிரகம்

Related Articles

பூமியில் இருந்து 41 ஒளியாண்டுகள் தொலைவில் அமைந்துள்ள இந்த கோள் பூமியை போலவே அமைந்துள்ளது என விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். LHS 475 b என பெயரிடப்பட்டுள்ள இந்த கோளின் வளிமண்டல அமைப்பு எப்படியானது என அறிந்துகொள்ள முடியவில்லை.

இந்த கோளில் சில வாயுக்கள் இருப்பதாக ஜோன்ஸ் ஹொப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் பௌதீக ஆய்வுக்கூடத்தின் கலாநிதி பட்டதாரியான ஜேகப் லஸ்டிங் யேகேர் தெரிவித்துள்ளார்.

அந்த கிரகத்தில் சனிக்கிரகத்தின் சந்திரனான டைடனில் இருக்கும் வாயுவை ஒத்த கன மீதேனுடன் கூடிய வாயு இருக்கலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

பாறை கிரகமான இந்த கிரகம் பூமியை விட ஒரு வீதம் சிறியது. இந்த கிரகத்தில் உயிர்கள் வாழ்கின்றனவா அல்லது மனிதர்கள் வாழ முடியுமா என்பதை குறித்து உறுதியான தகவல்கள் வெளியிடப்படவில்லை.

ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி மட்டுமே பூமியின் அளவில் வெளியில் இருக்கும் கோள்களின் வளிமண்டலத்தை வகைப்படுத்தும திறன் கொண்ட ஒரே தொலைநோக்கியாகும்.

கிரகத்தில் வளிமண்டலம் இருக்கின்றதா என்பதை அறிய அலை நீள ஒளியின் மூலம் கிரகத்தை பகுப்பாய்வு செய்ய விஞ்ஞானிகள் குழு ஜேம்ஸ் வெப் தொலைநோக்கியை பயன்படுத்தினர் எனினும் அவர்களால் தற்போது உறுதியான முடிவுகள் எதனையும் வெளியிட முடியவில்லை.

கண்டுபிடிக்கப்பட்டுள்ள இந்த கிரகத்தில் பூமியை விட நூற்றுக்கணக்கான டிகிரி வெப்பம் கண்டரியப்பட்டுள்ளது.

More on this topic

Comments

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Advertismentspot_img

Popular News