முட்டைக்கு அதிகபட்ச சில்லறை விலை நிர்ணயம் செய்யப்பட்டு வர்த்தமானி அறிவித்தலொன்று வெளியிடப்பட்டுள்ளது இதன்படி வெள்ளை முட்டை ஒன்றின் அதிகபட்ச சில்லறை விலை 44 ரூபா சிவப்பு முட்டை ஒன்றின் அதிகபட்ச சில்லறை விலை 46 ரூபா என அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்று 21.01.2023 முதல் இந்த அதிகபட்ச சில்லறை விலை நிர்ணயத்தின் பிரகாரம் முட்டை விற்பனை செய்யப்பட வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.