யாழ்ப்பாணம்-கோப்பாய் பொலிஸாரை வீதியில் வைத்து இருவர் அச்சுறுத்திய சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.உரும்பிராய் சந்தியில் நேற்று மாலை(28.04.2023) வீதி போக்குவரத்து ஒழுங்கு பணியில் ஈடுபட்டிருந்த கோப்பாய் பொலிஸாரை கிறீஸ் கத்தியை காண்பித்து அச்சுறுத்திய இருவர் மோட்டார் சைக்கிளை கைவிட்டு தப்பித்துள்ளனர்.
வீதி போக்குவரத்து ஒழுங்கு பணியில் ஈடுபட்டிருந்த கோப்பாய் பொலிஸார், மோட்டார் சைக்கிளில் வந்த இருவரை மறித்து சோதனையிட முற்பட்டுள்ளனர்.இதன்போது பொலிஸாருக்கு கிறீஸ் கத்தியை காண்பித்த அவர்கள் மோட்டார் சைக்கிள், தேசிய அடையாள அட்டை என்பவற்றைக் கைவிட்டு தப்பி ஓடியுள்ளனர்