வரலாற்று சிறப்பு மிக்க யாழ் நயினாதீவு ஸ்ரீ நாகபூசனி அம்மன் ஆலய மஹோற்சவத்தின் முத்தேர் திருவிழா இன்று (03) பக்திபூர்வமாக இடம்பெற்றது. கருவரையில் வீற்றிருக்கும் நாகபூசனி அம்மனுக்கும், வசந்த மண்டபத்தில் அருள்பாலித்துக் கொண்டிருக்கும் விநாயகர் மற்றும் முருகன், வள்ளி – தெய்வானை என சகதெய்வங்களுக்கு விசேட அபிஷேகங்கள், ஆராதனைகள் இடம்பெற்று உள்வீதியூடாக வலம் வந்து காலை 06 மணியளவில் வெளிவீதி வந்து 07 மணியளவில் மஹோற்சவ தேரில் வீற்று அருள்பாலித்தனர்.
இம் மஹோற்வத் திருவிழா, கடந்த மாதம் 20 ஆம் திகதி ஆரம்பமாகியது. இன்று இரதோற்சவம் நடைபெற்றது. நாளை தீர்த்த உற்சவத்துடன் மஹோற்சவம் நிறைவடையும் என்பது குறிப்பிடத்தக்கது.