ஸ்மார்ட்போன்கள் புதிது புதிதாக சந்தையில் தினமும் அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றன.
ஒரு புதிய போன் வாங்கும் திட்டம் உங்களிடம் இருக்குமாயின் சில விடயங்களை அறிந்து வைத்திருக்க வேண்டும்.
டிஸ்ப்ளேட
டிஸ்ப்ளே ஸ்மார்ட் போனின் தொடுதிரையின் அளவையும் மற்றும் துல்லியத்தையும் தெரிந்துகொள்ள வேண்டும். HD, Full HD திரைகள் பல ஸ்மார்ட் போன்களில் உள்ளன. Full HD திரை துல்லியமாக வண்ணங்களைக் காட்டும். கைக்கு அடக்கமாக பயன்படுத்த அதிகபட்சம் 5 இன்ச் அளவுள்ள திரை இருந்தால் போதுமானது ஆகும்.
கெமரா
13 எம்.பி அல்லது அதற்கு மேல் அதிகமுள்ள கெமரா கொண்ட செல்போன் வாங்குவது புகைப்பட விரும்பிகளுக்கு பயனுள்ளதாக இருக்கும்.
இன்டேனல் மெமரி
இன்டேனல் மெமரி (Internal Memory) அளவு 16GB, 32GB, 64GB மற்றும் 128GB ஆகியவற்றில் கிடைக்கின்றது. குறைந்தபட்சம் 16GB மெமரி கொண்ட மொபைல் வாங்குவது நல்லது ஆகும்.
ஸ்பீக்கர்
வீடியோக்கள் மற்றும் திரைப்படங்களைப் பார்ப்பதற்கும், இசையைக் கேட்பதற்கும் மற்றும் கோள் கதைப்பதற்கும். பலவற்றிற்கும் ஸ்மார்ட்போன்களை பயனர்கள் பயன்படுத்துகின்றனர். அதனால் ஸ்பீக்கர்களின் தரம் மற்றும் அவற்றின் ஒலி அமைப்பை வாங்குவதற்கு முன்பு அவதானமாக சரிபார்த்து வாங்கவும்.
விலை
உங்கள் பட்ஜெட்டிற்கு பொருந்தக்கூடிய வகையில் ஃப்போனைத் தேர்ந்தெடுப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். தேவையைப் பொறுத்த வகையில் ஒரு தொலைபேசி தேர்ந்தெடுக்கப்படல் வேண்டும்.