மேற்கு வங்க மாநிலம் ஹூக்ளி மாவட்டத்தில் உள்ள பெல்டிஹா என்ற கிராமத்தில் வசிப்பவர் அனிமா சக்ரவர்த்தி என்ற 76 வயது மூதாட்டிமிகவும் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தவர். தனது இளமை பருவத்தில் பல வீடுகளில் வீட்டு வேலை செய்து குடும்பத்திற்கு வருமானம் ஈட்டி கொடுத்திருக்கிறார்.
இவர் சில வீடுகளில் வேலை பார்க்கும் போது வீட்டில் இருக்கும் உணவைக் கொடுப்பார்கள். ஆனால் அவர் தேநீர் மற்றும் சத்தான திரவ பானங்கள் மட்டுமே சாப்பிட்டார். இதற்குப் பழகிய அனிமா உணவு உண்பதை நிறுத்தினார் கடந்த 50 ஆண்டுகளாக திரவ உணவுகளை மட்டுமே சாப்பிட்டு ஆரோக்கியமாக இருந்ததைக் கண்டு அவரது குடும்பத்தினர் மட்டுமின்றி ஒட்டுமொத்த கிராமமே ஆச்சரியமடைந்துள்ளனர்.