காணாமல் ஆக்கப்பட்டோருக்காக அவர்களது உறவினர்களால் மேற்கொள்ளப்பட்டு வரும் கவனயீர்ப்பு போராட்டத்தின் போது கலந்து கொள்ளும் தாய்மார்களுக்கு உதவி செய்த வவுனியா புளியங்குளம் சமுர்த்தி ஊழியரான சண்முகநாதன் வர்ணிகா, இனந்தெரியாத நபர்களால் கடத்தப்பட்டு துன்புறுத்தப்பட்டுள்ளார்.
காணமல் ஆக்கப்படோருக்கான கவனயீர்ப்பு போராட்டம் வவுனியா தபால் நிலையத்திற்கு அருகில் நடைபெற்று வரும் நிலையில் அந்த போராட்டத்தில் பங்குபற்றுபவர்களுக்கு மற்றும் உதவி செய்பவர்களுக்கு தொடர்ந்து அச்சுறுத்தல்கள் இடம்பெற்று வருகின்றன.
கடந்த சனிக்கிழமையன்று (25-01-2020) போராட்டக்காரர்களுக்கு உதவிய பெண் சமுர்த்தி ஊழியரொருவர் இனந்தெரியாத ஆயுதமேந்தியவ்ர்களால் கடத்தப்பட்டு துஷ்பிரயோகத்திற்ற்கு உள்ளாக்கப்பட்டு சிகரெட் நெருப்பால் சுடப்பட்டு துன்புறுத்தப்பட்டுள்ளார்.