2009க்கு முந்தைய யுகத்தை நினைவுபடுத்தும் வகையில் ஊடகவியலாளர் ஒருவர் வவுனியாவில் கடத்தப்பட்டு தாக்கப்பட்டு அச்சுறுத்தப்பட்டுள்ளார். கடந்த வாரம் (10.10.2021) சனிக்கிழமை கணேசநாதன் கிருசாந் எனும் இணைய செய்தி ஊடகவியலாளர் கடத்தப்ப்ட்டு தாக்கப்பட்டு நேற்றையதினம் விடுவிக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பில் தாக்கப்பட்ட ஊடகவியலாளர் கருத்துத் தெரிவிக்கையில், கடந்த 10ஆம் திகதி கடத்தப்பட்டு தொடர்ந்து 8 நாட்களாக துன்புறுத்தப்பட்டு வந்தேன். இந்த ஒரு வார காலப்பகுதியில் நான் மிகவும் மன உளைச்சலுக்கு ஆளாகியிருந்தேன். இன்று எனது வீட்டில் ஊடகங்களுக்கும் பேசவேண்டாம் என்றும் தடைவிதித்தார்கள்
அண்மைக்காலங்களாக இவ்வாறான கடத்தல் செயல்கள் அதிகரித்து வருகின்றமையும் மற்றும் பல கொலை அச்சுறுத்தல் இடம்பெற்று வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.